மதுரை சாலையில் மனித தலை கிடந்த விவகாரம்.. போலீசார் விசாரணையில் தெரிந்த நாயால் நடந்த ட்விஸ்ட்..!

0 1282
மதுரை சாலையில் மனித தலை கிடந்த விவகாரம்.. போலீசார் விசாரணையில் தெரிந்த நாயால் நடந்த ட்விஸ்ட்..!

மதுரையில் திருப்பாலை காவல் நிலையம் அருகே நத்தம் சாலையின் நடுவில் தலை மட்டும் கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அருகில் இருந்த மயானத்தில் எரிக்கப்பட்ட உடலில் இருந்த தலையை நாய் இழுத்து வந்து சாலையில் போட்டு சென்றது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி புதன்கிழமை அன்று உடல்நலக்குறைவால் இறந்ததையடுத்து மயானத்தில் எரியூட்டப்பட்ட அவரது உடல் மழை வந்ததால் பாதி மட்டும் எரிந்ததாக கூறப்படுகிறது.

கவனக்குறைவால் மயான ஊழியர்கள் அதனை பார்க்காமல் இருந்த நிலையில், நாய் தலையை இழுத்து வந்து சாலையில் போட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments