கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

0 1369

திருச்சி அரியமங்கலம் பீடி காலனியை சேர்ந்தவர் அக்பர் அலி இவரது மனைவி சம்சத் பேகம். இவர்களுக்கு சிராஜ் என்ற மகனும், நிஷா என்ற மகளும் உள்ளனர். கவரிங் கடை நடத்திவரும் சிராஜுக்கும், ஆயிஷா என்பவருக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ள நிலையில் மாமியார் சம்சத்துக்கும், மருமகள் அயிஷாவிற்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் மாமியார் சம்சத் தூங்கும் போது அவரது முகத்தை தலையனையால் அமுக்கியும், கழுத்தை நெரித்தும் மருமகள் ஆயிஷா கொல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதனால் ஆயிஷாவை மன நல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை கொடுத்துள்ளனர்

அயிஷாவின் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக வியாழக்கிழமை சம்சத் குடும்பத்தினர் ஆயிஷாவை ஒடுகம்பட்டி தர்காவிற்கு கூட்டிச்சென்றனர். அங்கு மந்திரிக்கப்பட்ட கயிறு ஒன்றை ஆயிஷாவின் கையில் கட்டி அழைத்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மாமியார் மருமகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடைய கையில் இருக்கும் கயிறை கழட்டும்படி மாமியாரிடம் சண்டையிட்ட ஆயிஷா , ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்று, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்திகளை எடுத்து வந்து மாமியார் சம்சாத் பேகத்தை இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் சரமாரியாக குத்தியதில் சம்சாத் பேகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமியார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த நிலையில் ஆயிஷா வீட்டிலே இருந்தார். வீட்டிலிருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சம்சத் இறந்து கிடக்க குழந்தையும் காயத்துடன் இருந்ததை கண்டு அதனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அரியமங்கலம் போலீசாரை கண்டதும் மருமகள் ஆயிஷா மயங்கி விழுந்தது போல படுத்துக் கொண்டதால், அவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். ஏற்கனவே மாமியார் மருமகள் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், ஆயிஷாவுக்கு உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டிருந்ததா ?என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments