நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

0 1903

சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை இழுத்துப் பூட்டப்பட்டது. அதே போல சுகாதாரமில்லாமல் பிரியாணி சமைத்ததாக அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்


சென்னை கொடுங்கையூர் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட தங்கள் மனைவி குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை..!

காவல்துறையினர் தங்களிடம் புகார் அளிக்க வருமாறு தெரிவித்த நிலையில் கடையை பூட்டவேண்டும் என்று உறவினர்கள் ஆவேசமாக கோரிக்கை வைத்தனர்

இதையடுத்து உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து விசாரித்த போது அந்த கடையில் எந்த உணவும் தயாரிக்கப்படுவதில்லை என்பதும் அலமாதியில் உள்ள பொது சமையல் கூடத்தில் வைத்து பிரியாணியை தயார் செய்து , ஒவ்வொரு கிளைக்கும் அனுப்பி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

அந்த சமையல் கூடத்தை ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்த சென்னை அதிகாரிகள், ஓட்டலை எப்படி பராமரிக்க வேண்டும் ? எதனை செய்யக்கூடாது என்று எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி மேலாளர் அப்துல் சமதுவுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றையும் வழங்கினர்.

பாதிக்கப்பட்டவர்களால் அங்கு பிரச்சனை ஏதும் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று கடை பூட்டப்பட்டது.

அதே போல இன்ஸ்டாகிராமில் பிரியாணி வீடியோ பதிவிட்டு பாப்புலரான அப்பு என்பவரின் பிரியாணி தயாரிக்கும் சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமில்லாமல் பிரியாணி தயாரிப்பது உறுதியானதால் கடையை இழுத்து பூட்ட போவதாக கூறினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பு சாலையில் பிரியாணி அண்டாக்களை வைத்து மறியல் செய்தார்

தான் ஏழை என்பதால் அதிகாரிகள் மிரட்டுவதாக இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ வெளியிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்

போலீஸ் எஸ்.ஐ முன்பு நெஞ்சில் அடித்து சாபமிட்ட அப்புவை போலீசார் எச்சரித்து சமாதானப்படுத்தினர். அப்புவின் ஆக்டிங் கைகொடுக்காத நிலையில், அந்த சமையல் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments