தென்காசியில் கடந்த ஆண்டு லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நபர் மீண்டும் கைவரிசை காட்டிய போது கைது

0 429

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த செட்டியூரில் இருவேறு நாட்களில் 2 வீடுகளில் புகுந்து பணம் நகையை ஒரு கும்பல் திருடிச் சென்றது.

விசாரணையில் இறங்கிய போலீசார், கணேசன், சங்கரராமன், ரமேஷ், செந்தில்குமார் ஆகியோரைக் கைது செய்து, 157 கிராம் தங்க நகைகள், இரண்டரை லட்சம் பணம், இரண்டு கார்கள், ஏழு செல்போன்கள் உட்பட 20 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நான்கு பேரில் கணேசன் என்பவன் கடந்த ஆண்டு நடைபெற்ற லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவன் என்பதும் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் திருட்டை அரங்கேற்றியதும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments