சென்னையில் ரூ.4 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற 5 பேர் கைது

0 15632

சென்னை வில்லிவாக்கத்தில் ஆணின் பெயரில் உள்ள 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்துக்கு பெண் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

3544 சதுர அடி பரப்பளவுள்ள அந்த நிலம், அதே பகுதியைச் சேர்ந்த லைசா ஜோஷ்வின் என்ற 88 வயது மூதாட்டியின் மறைந்த தந்தை வேளாங்கண்ணி பெயரில் இருப்பதாக தெரிகிறது.

அந்த  நிலத்தை அபகரிக்க முயன்ற மோசடி கும்பல், வேளாங்கண்ணி என்பது பெண் பெயர் என நினைத்து, ஆந்திராவை சேர்ந்த அதே பெயர் கொண்ட பெண் மூலம் போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி லைசா ஜோஷ்வினுக்கு தெரியவந்ததும் அவர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், நீண்ட காலமாக கவனிப்பின்றி உள்ள நிலங்களை குறிவைத்து டபுள் டாக்குமெண்ட் தயாரித்து அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்ததும், அதற்கு உடந்தையாக அயனாவரம் துணை தாசில்தார் மற்றும் கொன்னூர் சார்பதிவாளர் பட்டா வழங்கி வந்ததும் தெரியவந்தது.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments