திரிஷாவ அப்படியே தூக்கி.. மன்சூர் அலிகானின் வக்கிர பேச்சு.. நடிகைகள் கடும் கண்டனம்..! நடிகர் சங்கம் தூங்குகிறதா ?

0 3620

நடிகை திரிஷா குறித்து ஆபாசமாகவும் அருவெருக்கத்தக்கவகையிலும் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டன குரல்கள் ஒலிக்க தொடங்கி இருக்கின்றன. லியோவில் வில்லனாக ஆசைப்பட்டவரின் விபரீத சிந்தனை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

திரைப்படங்களை பார்த்து பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது பலாத்கார காட்சிகள் சினிமாவில் வைக்க மறுப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்..!

லியோவில் தன்னை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க அழைத்ததும் , பாலியல் பலாத்கார காட்சி இருக்கும் என்று ஆசையோடு சென்றதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றார். சான்ஸ் கிடைத்திருந்தால் நடிகை திரிஷாவ அப்படியே தூக்கிச்சென்று... தனது சேட்டையை காட்டியிருப்பேன் என்றும், முன்பு நடிகைகள் குஷ்பூ,ரோஜா உள்ளிட்டோரை இது போல செய்திருப்பதாக, அந்த நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு அறுவெருக்கதக்கவகையில் மன்சூர் அலிகான் பேசியதாக சர்ச்சை எழுந்தது

மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் மன்சூர் அலிகானின் பேச்சை வன்மையாக கண்டிப்பதாகவும், இது ஆணாதிக்க மன நிலையிலும், மரியாதை குறைவாகவும், பாலின பாகுபாட்டை பிரதிபலிக்ககூடிய மோசமான ஒன்றாக இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழும் அதே வேளையில், தன்னுடைய வாழ் நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன், அவரை போன்ற மனிதர்களால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கே இழுக்கு என்றும் திரிஷா கண்டம் தெரிவித்துள்ளார்

மன்சூர் அலிகானை, நடிகை மாளவிகா மோகனனும் கடுமையாக சாடியுள்ளார். ஒரு பெண்ணை பற்றி எப்படி மனதில் நினைத்து வைத்திருக்கிறார் , பொதுவெளியில் எப்படி இவ்வளவு அசிங்கமாக பேச முடிகிறது என்றும், பேசியது குறித்து அவர் சிறிதும் வருத்தப்படவில்லை, இது வெட்கப்பட வேண்டியது என்று கூறி உள்ளார்.

மன்சூரலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, நடிகைகளை பற்றி இழிவாக பேசிவிட்டு சும்மா காமெடிக்காக சொன்னேன் என்பது வழக்கம் என்றும். ஆனால் இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் ஒவ்வொரு நடிகைகளிடமும்,, பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்

மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எந்த துறையில் பணிபுரியும் பெண்களாக, கலைஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பளியுங்கள் என்றும் மன்சூரலிகானின் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

இதற்கு விளக்கம் அளித்துள்ள மன்சூரலிகான், தனது புதிய படம் வர இருக்கும் நிலையில்... வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தான் ஒரு பிரபல கட்சியில் சேர்ந்து போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில்.. யாரோ பிளான் பண்ணி வீடியோவை கட் பண்ணி போட்டு, திருஷாவிடம் காண்பித்து, கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா ? என்றும் உலகத்துல எவ்வளவோ பிரச்சனை இருக்கு அதபற்றி பேசுங்க போய் பொழப்ப பாருங்கய்யா என்று நக்கலாக விளக்கம் அளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments