முகப்பு
அரசு தரப்புக்கு கேள்விகளால் ஆணி அடித்த நீதிபதிகள்.. இது சாதாரண கொலை அல்ல..! நீதிமன்ற வாதம் முழு விவரம்
Jul 02, 2025 12:54 PM
165
அரசு தரப்பை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்..!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு தொடர்பாக விசாரிப்பதாக கூறி இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, அரசு தரப்புக்கு அடுக்கடுகான காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளது.
திருப்புவனம் காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு மடப்புரம் பத்தரகாளியம்மான் கோவில் காவலாளி அஜித் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கோ அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவுக்கோ மாற்றகோரி விருதுநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் மாரீஸ் குமார், மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் விசாரணை எனும் பெயரில் சித்திரவதை செய்து காவல்துறையினர் அஜீத்தை கொலை செய்துள்ளனர். ஒருவரை கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிகள் எதையும் காவல்துறையினர் பின்பற்றவில்லை.
அஜித் உயிரிழந்து 48 மணி நேரத்திற்கு மேலாகியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்விதமான வழக்கு பதிவும் செய்யப்படவில்லை. இது குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறதோ என்ற அச்சத்தை எழுப்புகிறது. திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரிக்கும் போது அவரைச் சுற்றி காவல் துறையினர் சூழ்ந்திருந்தனர்.
உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை. காவல்துறையை சேர்ந்த 6 நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், 5 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அஜித் குமார் கூறுவது பொய் என கூறியதால், திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் நன்றாக கவனியுங்கள் என கூறியதாக , சிறப்பு விசாரணை குழுவின் தலைமை காவலர் கூறியுள்ளார். ஆகவே அவர்கள் இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர் மாரீஸ்குமார் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
டி.எஸ்.பியின் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி விட்டு நகை திருட்டு தொடர்பாக அஜித் குமார் கூறுவது பொய் என கூறியதால், திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளரும் நன்றாக கவனியுங்கள் என கூறியதாக , சிறப்பு விசாரணை குழுவின் தலைமை காவலர் கூறியுள்ளார். ஆகவே அவர்கள் இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என வழக்கறிஞர் மாரீஸ்குமார் கோரிக்கை விடுத்தார்.
புகார் தாரர் நிக்கிதா, ஒரு IAS அதிகாரி யின் நெருங்கிய உறவினர் என்றும் அவரது அழுத்தத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் கூற, அப்படி ஏதும் இல்லை என்றும் நிகிதாவின் தாயார் ஒரு மாற்றுத் திறனாளி என்றும் அரசுத்தரப்பு கூறியது
நகை காணாமல் போன வழக்கில் ஏன் FIR பதியவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்னரே FIR பதிய வேண்டுமெந்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது என்று அரசுத்தரப்பு கூறிய நிலையில், யாருடைய உத்தரவின் பேரில் சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? அவர்கள் தானாகவே கையெலெடுக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சமூக வலைதளங்களில் கிடைத்த தகவலைக் கொண்டு, அவர்கள் விசாரித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்படியெனில் காவல்துறையினர் மாமூல் வாங்குவதாக பல வீடியோக்கள் சமூக வலைதங்களில் வருகின்றது. அதனை வைத்து சிறப்புப் படை விசாரித்து 2 மணிநேரத்தில் நிறுத்த முடியுமென்றால் நிறுத்துங்கள். விசாரிப்பார்களா? போலீசார் என்று கேள்வி எழுப்பியதோடு, சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்? யார் இந்த வழக்கை ஒப்படைத்தனர்? அவர்களாகவே இந்த வழக்கை கையிலெடுத்து விசாரிக்க முடியுமா? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விபரங்களை மறைக்கக்ச்கூடாது- நீதிபதிகள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சுளீர் ரகம்
திருட்டு வழக்கில் ஒரு நபரை விசாரணை என அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை. நீங்கள் முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற விசாரணையை சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? பின் ஏன் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினர்.
அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும்? சிறப்புப்படையிடம் ஒப்படைத்தது யார்?
அஜித் 2 நாட்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
மாஜித்திரேட்டிக்கு உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கை அனுப்பபடவில்லை?
காவல்துறை, நீதித்துறை குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்களா?
மாஜிஸ்திரேட் அப்பகுதி மக்களை ஏன் விசாரிக்க போலீசார் அனுமதிக்காதது ஏன் ? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
எஸ்.பி யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? விசாரணையை எதிர்கொள்ள் வேண்டியதுதானே?
தலைமை காவலர்களுக்கு ஒரு விசயத்தை கையாள்வதில் போதுமான புரிதல் இல்லை என்று சுட்டிக்காட்டப்படது
உடனடியாக குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூச முயல்கின்றனர் என்றனர்
இதையடுத்து உடற்கூராய்வு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கும், மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டானர்.
நீதித்துறை நடுவர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டுமெனவும் உத்தரவிட நேரிடும் எனவும் கூறிய நீதிபதிகள் நடவடிக்கை முக்கியம் என்றனர். ஆனால் இந்த வழக்கை எப்படி விசாரிக்க வேண்டுமென்பது முக்கியம். ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்லவில்லை. மக்களைக் காக்கவே காவல்துறை. அவர்களே மக்களைத் தாக்கினால், அதன் நோக்கமே இல்லாது போய்விடும். சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைக் காக்கவே, அவர்களது நலனுக்கே என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் அதிக கல்வியறிவு கொண்ட மக்களைக் கொண்ட மாநிலம். இருப்பினும் இது போல் நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள்
ஏன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை? - நீதிபதிகள். காவல்துறையினர் உயர் அதிகாரிகளின் சட்டவிரோத கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டிய அவசியமில்லை என்றும்
மனுதாரர்கள் சமர்ப்பித்த ஆதாரங்கள் நீதிமன்றத்தை தொல்லை செய்வதாக வேதனை தெரிவித்தனர்.
இந்த விசயத்தில் மறைக்கப்படுபவற்றை
சட்டவிரோத காவல் மரணம் அடிப்படை உரிமைக்கு எதிரானது.
காவல்துறையினர் பொதுமக்களை பாதுக்காக்கவே. ஆகவே சட்டவிரோத காவல் மரணங்களை நீதிமன்றம் கடுமையாக பார்க்கிறது. திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றம் சமர்ப்பிக்க வேண்டும். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் . உடற்கூராய்வு அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவு
இந்த வழக்கை மாநில அரசு நீர்த்துப் போகும் வகையில் செயல்பட்டால் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
மாலை 3 மணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தரப்பில் அஜித்குமாரின் இடைக்கால பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். இளைஞர் அஜீத்தின் உடலில் எந்த பாகங்களும் விடுபடாமல் அவ்வளவு இடங்களிலும் காயம் உள்ளது. அதிகாரம் இத்தகைய மனநிலையை காவல்துறையினருக்கு கொடுத்துள்ளது.
இதுவரை FIR பதியப்படவில்லை. அதற்கு முன்பாக எப்படி ஒரு நபரை தாக்கினீர்கள்? யார் இந்த நிகழ்வின் இயக்குநர்? அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நீதிபதிகள் இது சாதாரண கொலை வழக்கு போல் இல்லை, அஜீத் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார், உடலில் 44 காயங்கள் உள்ளது .பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது என்றனர்.
இப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது . ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்கக் கூடாது என்று எச்சரித்ததோடு சிறப்புப்படை FIR பதியப்படாமல் எப்படி வழக்கை கையிலெடுத்தது? என்ற நீதிபதி, குறைந்த பட்சம் ஒரு சீனியர் அலுவலரையாவது அக்குழு கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். என்ன நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்வதாகவும், நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் நிச்சயமாக அது இருக்கும் என்றும் அரசுத்தரப்பு தெரிவித்தது.
இதற்கு காரணமான உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபப்ட வேண்டும். அவர்கள் சிறப்பு படையின் நடவடிக்கையை மேற்பார்வை செய்யவும் தவறியுள்ளனர். மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
அரசு அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் என்று கேட்கப்பட்டது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி சிசிடிவி காட்சிப் பதிவுகளை சிடியாக தாக்கல் செய்தார். நடந்த சம்பவங்கள் சிசிடிவி-யால் பதிவாகியுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள், அதனை சாட்சியாக ஏற்க சான்று வேண்டும் என்று அரசுத்தரப்பு கூறியது.
காவல்துறையின் செயல் குறித்தே கேள்வி எழுகையில் அதனை சான்றாக எடுக்கலாமே? என்ற நீதிபதிகள்
சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் சாட்சியங்களை சேகரித்தது யார்? அங்கிருந்த ரத்தக்கறைகள், சிறுநீர் அடையாளங்கள் உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினர். அங்கு அப்படி எந்த ரத்தக்கறையும் இல்லை என்று அரசுத்தரப்பு
அவ்வாறெனில் எஸ்.பி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான். சாட்சிகளை சேகரிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காது, மூக்கில் ரத்தம் வரும் அளவிற்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார்.அந்த ரத்தக்கறைகள் எங்கே? என்றனர்.
சம்பவம் நடந்த அன்றுள்ள சிசிடிவி காட்சிகளை SI ராமச்சந்திரன் எடுத்துச் சென்றுள்ளார் என கோவில் உதவியாளர் தரப்பில் தகவல். அதனை முறையாக பாதுகாத்து விசாரணைக்கு பயன்படுத்துங்கள் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மரக்கட்டை, இரும்பு ராடுகளால் அஜித் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த வழக்கறிஞர் மாரீஸ் குமார் ,
விசாரணை காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை? அதனால் அதன் CCTV காட்சிகள் இல்லை.
கோவில் CCTV காட்சிகள் எடுத்ததாக, காவல்துறை அறிக்கையில் தகவல் இல்லை என்று சூட்டிக்காட்டப்பட்ட நிலையில் , இதை வைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடுவீர்கள் தானே? என்று அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
இதற்கிடையே நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் சக்தீஸ்வரன், போலீசார் அஜீத்தை தாக்குவதை, கோவில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து, தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், சிறிது நேரம் தான் எடுத்தேன் பயமாக இருந்ததால் வெளியே வந்து விட்டேன் என்று சாட்சியம் அளித்தார்
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கொலை வழக்காக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்புப்படையைச் சேர்ந்த 5 நபர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பவ்யமாக மாறிய அரசு தரப்பு, "அரசு நிச்சயம் அடுத்தக்கட்ட உரிய நடவடிக்கைகளை உயரதிகாரிகள் மீது எடுக்கும் என உறுதி அளிக்கப்பட்டது.கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் இது துரதிஷ்டவசமான நிகழ்வு என்று தெரிவித்தனர்.
அரசால் எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உயரதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. 5 நபர்கள் மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வருங்காலங்களில் எந்த காவல்துறையினரும் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது.
கல்வியறிவு அதிகமுள்ள தமிழகம் போன்ற மாநிலத்தில் இது போல நிகழ்வு ஆபத்தானது
மடப்புரம் ஆதிதிராவிட விடுதியின் பின்புறம், தனியார் தோப்பு ஆகிய இடங்களில் வைத்து அஜித் தாக்கப்பட்டுள்ளார் என்று மனுதாரர் தரப்பு குற்றஞ்சாட்டியது.
இதனை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்று அரசுத்தரப்பு கூறிய நிலையில்
நீங்கள் எதிர் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள் என்ற நீதிபதி
சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் சம்பவத்தை யாரும் மறக்க இயலாது.
மிளகாய் பொடி அஜித்தின் பிறப்புறுப்பிலும், வாய், காதுகளில் போடப்பட்டுள்ளது
அஜித்தின் தாயார் அளித்த புகார் தொடர்பாக இதுவரை வழக்கு பதியப்படவில்லை
அரசு இந்த வழக்கை உணர்வுப்பூர்வமாக எடுத்து நியாயமான விசாரணையை சிபிசிஐடி யின் சிறப்புக்குழுவால் நடத்த வேண்டும் என்றும் சட்டவிரோத மரணத்திற்கு காரணமான உயரதிகாரகள் முதற்கொண்டு தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்
சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. விசாரணை அலுவலர் அனைத்து சாட்சியங்களையும் முறையாக சேகரித்ததாக தெரியவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில், வழக்கை சிபிஐ க்கு மாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அரசு இந்த விசயத்தில் நேர்மையாக உள்ளது. யாருக்கும் சாதகமாக இல்லை என்பதை வெளிப்படுத்தவே இதைக்கூறுகிறோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அஜித் உடல்முழுக்க கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவருகிறது என்றும்
கொலை செய்பவர் கூட இது போல தாக்க மாட்டார் ? என இந்த நீதிமன்றம் கருதுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகள் உதவி காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் சிசிடிவி காட்சிகளை எடுத்துச் சென்றதாக கோவில் உதவி ஆணையர் கூறுகிறார். அரசுத்தரப்பில், அவை பாதுகாப்பாக மாவட்ட குற்றப்பிரிவின் தொழில்நுட்பப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதன் நகலை எவ்வித மாறுதல்களும் செய்யாமல் அப்படியே மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் வழங்கி, அது பாதுக்காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணையை தொடங்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும்
அரசுத்தரப்பில் இதற்கு பொறுப்பான, காரணமான உயரதிகாரிகள் முதற்கொண்டு அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்புவனம் காவல் ஆய்வாளர், சிவகங்கை எஸ்.பி, விசாரணை அலுவலர், சிறப்புப்படையினர் ஆகியோர் வழக்கு தொடர்பான சிசிடிவி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிபதியிடம் நாளை வழங்க வேண்டும். மாவட்ட நீதிபதி அனைத்து ஆவணங்களையும் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுக்காக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் , மரிய கிளாட் அமர்வு வழக்கு விசாரணையை ஜீலை 8 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
முன்னதாக அஜீத் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் குடும்பத்தினரும் காவல் நிலையம் முன்பு அமர்ந்து உயர் அதிகாரிகள் சொன்னதை தான் அவர்கள் செய்ததாக , போராட்டம் என்ற பெயரில் மீடியாக்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தனர்
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில் எப்படி ஜாமீன் கிடைக்காமல் 9 காவலர்களும் 4 வருடங்களுக்கு மேலாக கம்பி எண்ணி வருகிறார்களோ, அதே போல இளைஞர் அஜீத் கொலை வழக்கில் சிக்கி உள்ள இந்த 5 அடியாள் போலீசாரும் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகாரத்தால் செய்தாலும், அதிகாரம் சொல்லி செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu