தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கில் நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்..

0 893

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ஜெயப்பிரதா, தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை ஒன்றை திறந்து வைத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராம்பூர் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, 4- வது முறை பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஜெயப்பிரதா கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments