என்ன சரக்கா இருக்கும் ? இந்த சுத்து சுத்துறான் போலீசை தவிக்கவிட்ட குடிகார ஹல்க்..! சாலையில் ஓடி விளையாடி அலப்பறை

0 2380

லாரியின் கண்ணாடியை கையால் அடித்து உடைத்த குடிகார ஹல்க் ஒருவர், போலீசாரை கண்டதும் செத்தவர் போல படுத்து நடித்த நிலையில் அவரை மீட்ட போலீசார் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதை ஆசாமி தப்பி ஓடி போலீசுக்கு தண்ணி காட்டிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

லாரியின் கண்ணாடியை உடைத்து விட்டு போலீசாரிடம் இருந்து தப்பிக்க சாலையோரம் சடலம் போல படுத்துக்கிடக்கும் இவர் தான் குடிகார ஹல்க் அஜித் குமார்..!

சிதம்பரம் வண்டி கேட் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி போலீசார் வருவதை பார்த்ததும் சாலையோரமாக யாரோ அடித்துப் போட்டது போல படுத்துக் கொண்டு எழுந்திருக்க மறுத்தான்

போலீசார் சென்று விட்டார்கள் என்று நினைத்து கண்விழித்து பார்த்த போதையன், போலீசாரை கண்டதும், மயக்கத்தில் இருந்து எழுவது போல நடித்து தன்னை கொல்ல வருகிறார்கள் என்று தள்ளாடி மீண்டும் விழுந்தார்

உடனடியாக அந்த குடிமகனை ஆட்டோவில் அழைத்துச் சென்று விசாரிப்பதற்கு போலீசார் நினைத்தனர்

ஆட்டோவில் அள்ளிப் போட்டாலும் அடங்க மறுத்த போதை ஆசாமி அதில் இருந்து எகிறிகுதித்து சாலையில் செல்லும் வாகனங்களை மறிக்க தொடங்கினான். பெண் ஒருவர் ஓட்டி வந்த இரு சக்கரவாகனத்தை விழவைக்க முயல போலீசார் விரைந்து சென்று அவனை தடுத்தனர்

திடீரென அந்த குடிமகன் நான் வாகனங்களை உடைக்கவில்லை, என்னை கொல்ல வருகிறார்கள்.. என்று கூறியவாறே போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதால் செய்வதறியாது திகைத்தனர் போலீசார்

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய குடிகார ஹல்க்கை மடக்கிப்பிடித்து விசாரித்த போது அவர் சேதியூர் கிராமத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்பதும், போதையில் லாரி கண்ணாடியை உடைத்து விட்டு போலீசாரிடம் இருந்து தப்பிக்க அலப்பறையை கொடுத்ததும் தெரியவந்தது. போதை தெளிந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேல் நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments