நடைபயிற்சி சென்றவரை பைக் ஏற்றி கொன்ற வழிப்பறிக் கொள்ளையர்கள்..! தர்ம அடி கொடுத்த சம்பவம்

0 3361

சென்னை மேடவாக்கத்தில் வாக்கிங் சென்ற ஆட்டோ டிரைவரை பைக்கால் மோதி விழச்செய்து செல்போனை திருடிச்செல்ல முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் நையப்புடைத்தனர். ஒரு செல்போனுக்காக உயிரை கொன்ற பைக் கொள்ளையர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை மேடவாக்கம் விஜயநகரத்தை சேர்ந்தவர் கண்ணன் ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

தீபாவளி அன்று அதிகாலை மேடவாக்கம் மேம்பாலத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகன மோதி தூக்கி வீசப்பட்டார்.

அவருக்கு கால் மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், பைக்கால் மோதிய இருவர், ஆட்டோ ஓட்டுனரின் செல்போனை பறித்துச்செல்ல முயன்றனர்.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்து அங்கிருந்தவர்கள் பைக்கில் வந்த இருவரையும் மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தி செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் மேடவாக்கம், காமராஜர்புரத்தை சேர்ந்த புருஷோத் என்கிற கிஷோர் என்பதும், உடன் வந்தவன் அஸ்தினாபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

கொள்ளையர்கள் இருவரும் பழவந்தாங்கல் பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு, காமராஜ்புரம் வழியாக வரும்போது சுகி டெலிவரி செய்யும் நபரின் செல்போனை பறித்துக் கொண்டு வேகமாக தப்பி வந்துள்ளனர்.

செல்போன் கொள்ளையர்களை ஸ்விக்கி டெலிவரி செய்யும் வாலிபர் துரத்தி உள்ளார்

அவரிடம் தம்பித்து மேடவாக்கம் மேம்பாலம் வழியாக வேகமாக செல்லும்போது நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் மீது மோதியதும் அப்போது கூட அவரை காப்பாற்றாமல் , அவரது செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடும்வழியில் பொதுமக்களிடம் சிக்கியதும் தெரியவந்தது. கையெடுத்து கும்பிட்டு கதறிய கொள்ளையர்கள் இருவரையும் சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செல்போன் கொள்ளையர்கள் மோதி உயிரிழந்த கண்ணனின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு செல்போனுக்காக உயிர் காவு வாங்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments