பங்குச் சந்தையில் ரூ.30 லட்சம் முதலீட்டை இழந்து கடனாளியானதால் 10-வது மாடியில் குதித்து ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை

0 14482

கடன் வாங்கி, பங்குச்சந்தையில் செய்த 30 லட்சம் ரூபாய் முதலீட்டை இழந்து கடனாளியானதால், ஐ.டி ஊழியர் ஒருவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த புவனேஷ், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த சொந்த வீட்டை விற்பனை செய்வது குறித்து குடும்பத்தாரிடம் புலம்பிவந்துள்ளார்.

மேலும் வங்கியில் பெற்ற 10 லட்சம் ரூபாயை அடைக்கவேண்டிய நெருக்கடியில், புவனேஷ் இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்தால் உயிர் போகுமா? என தனது நண்பர்களிடம் விளையாட்டாக பேசி வந்த நிலையில், அவரது தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments