ஜம்மு காஷ்மீரில் முக்கிய நகரங்கள், எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்பு அதிகரிப்பு

0 1163

ஹமாஸ் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் இந்திய எல்லைப் பகுதியில் புதிய தாக்குதல்களுக்குத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலம் என்பதால் முக்கிய நகரங்களில் பொது மக்கள் திரளும் இடங்களிலும் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹமாஸ் பாணியில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் எல்லையில் ஊடுருவ 60 அந்நிய தேசத் தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும் அவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments