இப்படி செஞ்சா போதும் அதிக மதிப்பெண் பெறலாம்..? ஆசிரியர் சொன்ன நீட் ரகசியம்..! உதயநிதியிடம் சொல்லப்பட்ட யோசனை
கல்லூரி விழாவில் பங்கேற்க திருவாரூர் சென்றிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் போல நாமும் பாடங்களை குறைத்தால் நமது மாணவர்களும் நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் எளிதாக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவர் என்று தனியார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் யோசனை தெரிவித்தார்
திருவாரூர் அருகே அம்மையப்பன் பகுதியில் அமைத்துள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களிடம் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது இரு மாணவிகளுக்கு ஸ்டெதஸ்கோப் அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்ட உதயநிதி ஸ்டாலினை , வழிமறித்த தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன் என்பவர் , நீட் தேர்வுக்கு ஏற்றவாறும் ஜேஇஇ தேர்வுக்கு ஏற்றவாறும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து பாடங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெகுவாக குறைத்து விட்டது.
சி.பி.எஸ்.இ போல நாமும் பாடங்களை குறைத்தால் நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் நமது மாணவர்கள் எளிதாக அதிக மதிப்பெண்களை பெற முடியும் என யோசனை தெரிவித்தார்.
தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன் கூறிய கோரிக்கையை காரில் அமர்ந்தபடியே கேட்டுக் கொண்ட அமைச்சர் உதய நிதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் சரவணனிடம் தெரிவித்தார்.
Comments