தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வைக்க முயன்ற பா.ஜ.க கொடி கம்பம் போலீசார் அகற்றம்

0 1348

நவம்பர் 1ஆம் தேதி முதல், நாள் ஒன்றுக்கு 100 கொடி கம்பங்களை மாநிலம் முழுவதும் வைத்து கொடியேற்ற வேண்டும் என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில்,தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பாஜக கொடி கம்பம் வைக்க முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர்.

ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில் நிறுவ முயன்ற பாஜக கொடி கம்பத்தை போலீசார் கைப்பற்றினர். அசம்பாவிதத்தை தவிர்க்க டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

விருதாச்சலத்தில் அனுமதி இன்றி பாஜக கொடியேற்றியதாக கட்சியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மசக்காளிபாளையத்தில் பாஜக கொடிக்கம்பம் வைக்க முயன்றதை தடுத்த போலீசாருடன் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments