பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

0 818

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் ஏலத்தில் கலந்துகொள்ள வந்த பாஜகவினரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கல்குவாரி ஏலத்துக்கு ஒப்பந்தப் புள்ளி கொடுக்க வந்த பாஜக பிரமுகர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அவர்களைத் தடுக்க முயன்ற கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஜெயபால் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments