ஆளுநர் மாளிகை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு... போலீசாரின் முதற்கட்ட விளக்கத்துக்கும் முதல் தகவல் அறிக்கைக்கும் முரண்பாடு

0 2601

ஆளுநர் மாளிகை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தொடர்பாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் கொடுத்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2:40 மணிக்கு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை தீவைத்து மெயின்கேட்டை நோக்கி வினோத் வீசியதாகவும், அது பயங்கர சத்ததோடு வெடித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வினோத்தை மடக்கிப் பிடித்தபோது, மற்றொரு பாட்டிலை காவலர்கள் மீது அவன் வீசியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சென்னை காவல்துறை முதல்முறை கொடுத்த விளக்கத்தில் வெடிகுண்டு வீச முற்படும்போது குற்றவாளி பிடிபட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவை வெடித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments