கூடலூரில் முதியோர் இல்லத்தில் 100 வயது கடந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஆதரவற்ற பெற்றோர்களை கண்டு கண்ணீர் விட்டு அழுத ஆட்சியர் அருணா

0 1350

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நூறு வயது கடந்தவர்களை பெருமைப்படுத்துவிதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் கவலைகளை மறந்து ஆடிப்பாடியதைக் கண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கண்ணீர் விட்டு அழுதார்.

நிகழ்ச்சிக்கு பிறகு, முதியவர்களின் உடல் நலத்தை அக்கறையுடன் விசாரித்த மாவட்ட ஆட்சியர், அவர்களுக்கு சால்வை அணிவித்து, புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்து பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments