கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 9 லட்சம் பேர் மேல்முறையீட்டில் தகுதி உடையவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்

0 1571

கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் மேல் முறையீடு செய்துள்ள 9 லட்சம் பேரில் தகுதி உடையவர்களுக்கு உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகள் கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானம் மீது பேசிய அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார், உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், தகுதியான பலருக்கு கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களுக்கு உரிமை தொகை கொடுக்கப்படுவதாகவும் யாரேனும் விடுபட்டது குறித்து உரிய ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments