இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகள் ராக்கெட் வீச்சு

நேற்று முதல் இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலின் 3 ராணுவ நிலைகள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர்.
தெற்கு லெபனானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.
தங்கள் நாட்டிலிருந்து 40 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமித்துவிட்டதாக 1967ஆம் ஆண்டு முதல் லெபனான் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
Comments