தண்டவாளம் நடுவே இறந்து கிடந்த சுகாதாரத்துறை ஆய்வாளர்... உடலை எடுக்க வந்த ஆம்புலன்சும் விபத்தில் சிக்கியதில் ஓட்டுநரும் பலி

0 1628

  திருநெல்வேலியில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுகாதாரத்துறை ஊழியர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை எடுக்கச் சென்ற ஆம்புலன்சும் விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் உயிரிழந்தார்.

நெல்லை குலவணிர்கபுரம் ரயில்வே கிராசிங்கில் இன்று அதிகாலை தண்டவாளம் நடுவே விபத்தில் சிக்கி இறந்த ஒருவரின் உடல் கிடந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாகச் செல்ல வேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சம்பவம் நடந்த இடத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது.

விசாரணையில் இறந்துகிடந்தவர் நெல்லை சுகாதாரத்துறை ஆய்வாளர் என்பது தெரியவந்தது. உடலை எடுத்துச் செல்வதற்காக கிளம்பிய ஆம்புலன்ஸ் குலவணிகர்புரம் அருகே சென்ற போது கண்ட்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் ஜெயசீலன் என்பவர் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments