உளுந்தூர்பேட்டையில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்

0 758

உளுந்தூர்பேட்டை அருகே ஊ.செல்லூர் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இவ்வூரிலிருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பாண்டூர், களமருதூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளிலும், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் உள்ள கல்லூரிகளிலும் படித்து வருவதாக கூறப்படுகிறது.

பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதாலும் மாணவர்கள் பலர் ஆட்டோ, மினி டெம்போ, இருசக்கர வாகனங்களிலும், நடந்து சென்றும் வருவதாலும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டுமென தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தொடர் விடுமுறைக்கு பிறகு கூடுதல் பேருந்து இயக்கப்படும் என ஏற்கனவே நடந்த போராட்டத்தின் போது முடிவு செய்யப்பட்ட நிலையில் இன்று வரை இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊ.செல்லூர் பஸ் நிறுத்தம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய போலீசாருடன் முடிவு எட்டப்படாததால் கூடுதல் பேருந்து இயக்கும் வரை பள்ளிக்கு செல்ல மாட்டோம் என வீட்டிற்கு மாணவர்கள் திரும்பி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments