மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 96-வது பிறந்தநாள்.. உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.. !!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில் அமைச்சர்கள் மற்றும் சிவாஜியின் குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள் மற்றும் அவரது புகைப்படங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.
Comments