குஜராத்தின் கட்ச் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது.. !!

குஜராத்தின் கட்ச் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது.
கட்ச் மாவட்டம் காந்திதாம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஓடை அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியைக் கண்டனர்.
அதனை சோதனை செய்தபோது தலா ஒவ்வொரு கிலோ எடை கொண்ட 80 பாக்கெட்களில் கொகைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு 800 கோடி ரூபாய் என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments