தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

0 1844

தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஷவர்மா சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில், 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, உணவகங்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உணவகங்களில் அசைவம் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களும் முறையாகப் பதப்படுத்தி பயன்படுத்தப்படுகின்றனவா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தரமற்ற உணவை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments