60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாததை 5 ஆண்டுகளில் செய்தவர் மோடி - அண்ணாமலை பேச்சு

0 1264

பிரதமர் பதவியின் விலை ஆண்டுக்கு 50 லட்சம் கோடியில்  பட்ஜெட் போடுவதுதான் என்றும், அதைதான் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் அனைத்தும் குறி வைத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பழனி தேரடியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் செய்யமுடியாத பணியை 5 ஆண்டுகளில் செய்து காட்டியவர் மோடி எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி பொருளாதாரத்தில் நாட்டை முன்னேற்றியவர் மோடி என அண்ணாமலை தெரிவித்தார்.மேலும் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் நேர்மையான மோடிதான் பிரதமராக அமரவேண்டும் என்றார்

திமுகவினருக்கு சுவாமி கோவில் மூலம் வரும் லாபம் வேண்டும் ஆனால் சாமி வேண்டாம், சனாதனம் வேண்டாம் என கூறுவதாகவும் மகளிர் உரிமைத்தொகை கேட்டு புறக்கணிக்கப்பட்ட 56 லட்சம் பெண்களும் போராட காத்திருக்கின்றனர் என்றும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரலாம் என்றும், ஒரு வாக்கு செலுத்த போகிறோமா? இரண்டு வாக்குகள் செலுத்த போகிறோமா ? என தெரியாது என்றும் எப்படி இருந்தாலும் உங்களது விரல் நேர்மையை நோக்கி செல்ல வேண்டுமெனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments