தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த 2பேர் கைது..!

0 1450

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 181 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.  சோழமாதேவி பகுதியில் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக சோழமாதேவியை சேர்ந்த அசரப்அலி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்த போது  தஞ்சை பாபநாசம் அருகே உள்ள பசுபதி கோவிலை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரிடமிருந்து வாங்கி வந்து இந்த பகுதியில் சில்லறை வியாபாரம் செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து விக்னேஸ்வரனையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments