ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தொடரும் துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் பலி... தீவிரவாதிகளை பிடிக்க தொடர் நடவடிக்கை

0 905

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய என்கவுண்டர் இன்றும் நீடித்து வருகிறது.

பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், கடோல் வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வனப்பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் 2 முதல் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments