முறுக்கியது போதும்.. இறங்கி நடந்து போங்க பைக்கை பறித்த போலீசார்..! கொடிபிடித்து அடாவடி.... விழுந்தது பளார் அடி..!

0 1453

கரூரில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் இருசக்கர வாகனங்களை முறுக்கிக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யுவகையில் சாலையில்  அட்ராசிட்டி செய்த இளைஞர்களை மறித்த போலீசார் அவர்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். கொடிகளை வைத்துக் கொண்டு அடாவடி செய்தவர்களுக்கு விழுந்த அடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கரூரில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் ...... அரசு பேருந்தை மறித்து இளசுகள் அப்படி ஒரு ஆட்டம்...!

டூவீலர்களை எடுத்துக் கொண்டு சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுருத்தும் வகையில் கையில் கொடிகளை பிடித்தபடி அடாவடியாக முறுக்கிக் கொண்டு அதிவேகத்தில் பைக் ரேஸ்..!

எல்லாவற்றுக்கும் மேலாக கார்களின் ஜன்னல் பகுதியில் அமர்ந்து கொண்டு போலீஸ் பேச்சை கேட்காமல் குலுங்கி குலுங்கி கூச்சலுடன் ஆட்டம்....

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அவரது திருவுறுவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அதிக சத்தத்தை எழுப்பியவாறும், பெரிய அளவிலான கொடிகளை வைத்துக் கொண்டும் கரூர்- கோவை சாலை, பேருந்து நிலைய வளாகம், மேற்கு பிரதட்சணம் சாலை, ஜவஹர் பஜார் உள்ளிட்ட இடங்களில் அதிவேகத்தில் வலம் வந்தனர்

சர்ச் கார்னர் வழியாக வெங்கமேடு நோக்கி பாலத்தில் ஊர்வலமாக சென்றபோது, அங்கு பாஜக போராட்டத்திற்காக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் , சத்தம் எழுப்பிக் கொண்டு வந்த இளைஞர்களின் வாகனத்தை மறித்து, பைக்கை முறுக்கிய இளைஞருக்கு கன்னத்தில் பளார் என்று அறைவிட்டு பைக்கை பறிமுதல் செய்தனர்

தலையில் கொடியை கட்டிக் கொண்டு அட்டாகாசம் செய்தபடியே வந்தவர்களின் வாகனமும் பறிக்கப்பட்டது

கூட்டத்தோடு கோஷம் போட்டுக் கொண்டுமொபட்டி வந்த சிறுவர்களை மறித்த போலீசார் அவர்கள் ஓட்டிவந்த வண்டியை கைப்பற்றினர்

போலீசாரிடம் ஐயா மன்னிச்சி விட்டுறுங்க... என்று காலில் விழுந்து பார்த்தும் பலனில்லை, டி.வி.எஸ். 50 போச்சு..!

வண்டியை பறிகொடுத்து விட்டு, நூலும் இல்லை.. வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா... என்று சோகத்துடன் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

போலீசாரின் தரமான சம்பவத்தை பார்த்தவர்கள் போலீசாரிடமும் சிக்காமல் இருக்க, வந்த வழியாவே திரும்பிச் சென்றனர்.

மொத்தமாக 4 இரு சக்கரவாகனங்களை பறிமுதல் செய்ததுடன், வம்பு செய்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments