கும்பகோணத்தில் வழிப்பறி செய்து வந்த கும்பல் கைது.. 13 செல்போன்கள், 5 பைக், 2 கத்திகள் பறிமுதல்..!

கும்பகோணத்தில் வழிப்பறி செய்து வந்த கும்பல் கைது.. 13 செல்போன்கள், 5 பைக், 2 கத்திகள் பறிமுதல்..!
கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதங்களை காட்டி பணம், நகை, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வழிப்பறி செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் அருகே தொடர் வழிப்பறி நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்த நிலையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 13 விலை உயர்ந்த செல்போன்கள்,5 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 5பேரும் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டனர் .
Comments