நடிகை அளித்த புகார் குறித்து விசாரிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்..!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து விசாரிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், பலமுறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, தான் வெளியூர் செல்ல இருப்பதால் வருகிற செவ்வாய் அன்று ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments