இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு...!

0 1173

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகிய விண்ஆய்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜோ பைடன் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்திய விஞ்ஞானியை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பிவைக்க கூட்டுமுயற்சி, எரிகற்கள் போன்ற ஆபத்துகளில் இருந்து பூமியைக் காப்பாற்ற இருநாட்டு விஞ்ஞானிகள் கூட்டு ஆய்வு ஆகியவை குறித்து விவாதித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெட் விமான எஞ்சின்கள் தயாரிப்பு, அணுசக்தி மின்நிலையங்கள் அமைத்தல் ஆகியவை குறித்தும், தொழில், கல்வி, வர்த்தகம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாகவும், இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகவும், இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் மோடி தமது 'எக்ஸ்' தளத்தில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments