வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம்..!

0 1112

இந்தியாவின் தலைமையில் ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.

உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க இந்தியா வந்துள்ளனர். அவர்களுக்கு நடனம், கலை நிகழ்ச்சிகள் மூலமாக விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியவா, கிராமிய நடனத்தைப் பார்த்து தாமும் சில அடிகள் வைத்து நடனமாடினார்.

இன்று காலை 8.30 மணி முதல் தங்கள் நட்சத்திர விடுதி அறைகளில் இருந்து உலகத் தலைவர்கள் பிரகதி மைதானத்துக்கு வரத் தொடங்குவார்கள். விழா தொடங்கும் முன்பு உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக படமெடுத்துக் கொள்வார்கள்.

பிரதமர் மோடியின்அறிக்கையுடன் 10.30 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு உணவு இடைவேளை விடப்படும். வசுதைவ குடும்பகம் அதாவது 'உலகம் ஒரே குடும்பம்' என்ற கருப்பொருளில் பிற்பகல் அமர்வு நடைபெறும். ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ விருந்து அளிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments