சனாதனம் பற்றிய கருத்துகளுக்கு அரசியல் சாசனப்படி பதிலடி தர வேண்டும் : பிரதமர் மோடி

0 1421

சனாதனம் பற்றிய அவதூறு கருத்துகளுக்கு அரசியல் சாசனப்படி, உண்மைகளை விளக்கிக் கூறி பதிலடி தர வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர், சனாதனம் தொடர்பான தாக்குதல்களை மவுனமாக கடந்து செல்லக் கூடாது என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் பிரதமர் கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும், நாட்டின் பெயரை பாரத் என மாற்றம் செய்யப்படுவதாக நடைபெறும் விவாதங்களில் அவசரப்பட்டு கருத்துக்களை தெரிவிக்காமல் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர்களை பிரதமர் கேட்டுக்கொண்டதாக மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments