சிங்கப்பூரின் 9-வது அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வு..!

சிங்கப்பூரின் 9-வது அதிபராக வம்சாவளித் தமிழரான தர்மன் சண்முக ரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அங்கு நடைபெற்ற தேர்தலில் தம்முடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 70 புள்ளி 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சண்முகரத்னம் 2001-ம் ஆண்டு சிங்கப்பூர் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர் , பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வியமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிகாலம் இந்த மாதம் 13-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
Comments