நடிகை பலாத்கார வழக்கு கைது செய்து பார்க்கட்டும்.. போலீசுக்கு சீமான் சவால்..!

0 1560

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் , தனக்கு முன்பாக 6 பேர் மீது அந்த நடிகை இது போன்று புகார் கூறி உள்ளதாகவும், தன்னை கைது செய்து பார்க்கட்டும் என்றும் சீமான் சவால் விடுத்துள்ளார்.

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் கடந்த 2011 ஆம் ஆண்டு மானபங்கம், பலாத்காரம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் , அதனை அடிப்படையாக கொண்டு 2 வது நாளாக கோயம்பேடு துணை ஆணையாளர் உமையாள் , பாதிக்கப்பட்டதாக புகார் அளித்த நடிகையிடம் விசாரணை நடத்தினார்

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து வந்த சீமான் , முதல் முறையாக நடிகைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அதில் தனக்கு முன்பாக 6 பேர் மீது அந்த நடிகை இது போன்ற புகார் கூறி இருப்பதாக தெரிவித்தார்

ஒரு கட்டத்தில் தன்னை கைது செய்து பார்க்கட்டும் என்றும் சீமான் போலீசுக்கு சவால் விடுத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments