மீஞ்சூரில் 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக சேதமடைந்த சாலையால் சுமார் 10 பேர் பலி என தகவல்

0 587

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் குண்டும் குழியுமாக பராமரிக்கப்படாமல் உள்ள சாலையால் இரண்டரை ஆண்டு காலத்தில் சுமார் 10 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து மேலூர் வரையிலான 3 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே பழுதானதாக கூறப்படுகிறது.

அதிக பாரத்துடன் ஆயிரக்கணக்கில் கனரக வாகனங்கள் பயணிக்கும் நிலையில், அதற்கு ஏற்ப சாலை அமைக்கப்படாததே இதற்கு காரணமென அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

சேதமடைந்த சாலையில் எழும் புழுதியால் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

சாலையை அமைத்ததிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்ததாரரே பராமரிக்க வேண்டுமென ஒப்பந்த விதி உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் ஒப்பந்ததாரர் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை அதிகாரிகள் அதை கேட்க மறுப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments