இந்தியா கூட்டணியின் 3 வது கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.. ஒருங்கிணைப்பாளர், பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசனை.. !!

காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 28 கட்சிகள் பங்கேற்கின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இரண்டு நாள் கூட்டத்தில் தேசிய அளவில் ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுக்கவும் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதற்கான போட்டி தொடங்கிவிட்ட நிலையில் பிரதமராக தகுதியோடு எதிர்க்கட்சியினருக்கு பல முகங்கள் உள்ளன என்றும், பாஜகவுக்கு மோடியை விட்டால் வேறுயாரும் இல்லை என்று மகாராஷ்ட்ர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.
Comments