இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மனைவி புஷ்ரா பீபி அச்சம்

0 1653

பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு புதிய கழிவறை, ஏர் கூலர் என பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்ரான் கானின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவருவதாகவும், உணவில் விஷம் வைத்து அவர் கொல்லப்படலாம் என்றும் அவரது கட்சியினர் அச்சம் தெரிவித்துவந்தனர்.

பயங்கரவாதிகள் அடைக்கப்படும் அட்டாக் சிறையிலிருந்து, அடிலியா சிறைச்சாலைக்கு அவரை மாற்றுமாறு  மனைவி புஷ்ரா பீபி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இம்ரான் கானை சந்தித்த பஞ்சாப் மாகாண சிறைத்துறை ஐ.ஜி. ஃபரூக் நஸீர், அவருக்கு மெத்தை, தலையணை, ஏர் கூலர், ஃபேன், பிளாஸ்க் போன்றவற்றுடன் புதிய வெஸ்டர்ன் டாய்லட் ஒன்றும் கட்டித்தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

24 மணி நேரமும் இம்ரான் கான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவும் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு பிறகே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments