மதுரை ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக 2 ஆவது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி விசாரணையை தொடங்கினார்

0 886

மதுரை ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக 2 ஆவது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி விசாரணை நடத்தி வருகிறார்.

ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் பெட்டியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் ஆன்மீக சுற்றுலா வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

விபத்தின் போது ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிய 5 பேரில் 3 பேரை பிடித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களில் சுற்றுலா நிறுவனத்தின் சமையல் உதவியாளர்கள் இருவரிடம் மீண்டும் 2 ஆவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்தின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments