சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.!

ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜு சோப்ரா முதன்முறையாக தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நீரஜ் சோப்ரா 88 புள்ளி 17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்தார்.
இரண்டாவது இடம் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு கிடைத்ததது, செக் குடியரசு வீரர் வெண்கலம் வென்றார். போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் 3 பேர் முதல் எட்டு இடங்களுக்குள் வந்தனர்.
அதே வேளை 3 ஆயிரம் மீட்டர் மகளிர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் பருர் சவுத்ரி 11-வது இடத்தை பிடித்தார். பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
Comments