சிறுநீரகப் பாதிப்பால் துபாயில் சிகிச்சையிலிருந்த தமிழர் மீட்கப்பட்டார்

0 821

உடல்நலம் பாதிக்கப்பட்டு துபாயில் தொடர் சிகிச்சையில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 24 மணி நேரத்தில் மீட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சஃபியுல்லா அப்துல் சுபான் என்பவர் துபாயில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சிறுநீர் குழாயில் தொற்று ஏற்பட்டதையடுத்து சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தனது கணவரை மீட்டு வருமாறு சபியுல்லாவின் மனைவி ஷமீலா அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, 3 மணி நேரத்தில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் சிறப்பு அனுமதியில் பாதுகாப்பிற்காக ஒரு மருத்துவருடன் சபியுல்லா சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டார்.

அதனை தொடர்ந்து தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments