ஆவின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ்

0 643

ஆவின் நிறுவனத்தின் உற்பத்தியை பெருக்கவும், அனைத்து பகுதிகளிலும் ஆவின் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் இராமியனஹள்ளியில் உள்ள பால் குளிர்விப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவினின் தயாரிப்புகளான வெண்ணெய், நெய் உள்ளிட்டவைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார்.

வரும் தீபாவளிக்கு கடந்த ஆண்டை விட 25 சதவீதம் கூடுதலாக ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கால்நடை தீவனத்தின் தரத்தை மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேம்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments