பிரிகோஷினின் மரணம் எதிர்பார்த்ததை விட தாமதமாக நிகழ்ந்ததுள்ளது : எலான் மஸ்க் விமர்சனம்

0 1869

வாக்னர் கூலிப்படை தளபதி பிரிகோஷினின் மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ரஷ்ய அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஷின், பெலாரஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பின்வாங்கினார்.

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளால் அவர் கொல்லப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பலரும் அப்போதே கூறி வந்தனர். இந்நிலையில் மாஸ்கோவிலிருந்து பீட்டர்ஸ்பெர்க் நகரம் நோக்கி சென்ற விமானம் திடீரென செங்குத்தாகச் சென்று பூமியில் மோதி வெடித்துச் சிதறியது.

முப்பதே வினாடிகளில் நடந்து முடிந்த இந்த விபத்தில் பிரிகோஷின் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். பிரிகோஷினின் மரணம் எதிர்பார்த்த ஒன்று தான் என்பது போல் ஜோ பைடனும், எலான் மஸ்கும் விமர்சித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments