காவிரி பிரச்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம் - அண்ணாமலை

காவிரி பிரச்சினைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, காவிரி பிரச்னையில் இடியாப்ப சிக்கலை உருவாக்கி முதலமைச்சர் ரசிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாய் இருக்கிறது என்பதற்காக ஆளுநரை பற்றி தி.மு.க.வினர் நினைத்ததைப் பேசக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டு சென்று தும்பாவில் இருந்து ஏவப்பட்ட நிலையில் இருந்து முன்னேற்றம் அடைந்து சந்திரயான்-3 திட்டம் இந்தியா சாதனை நிகழ்த்தி இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Comments