நண்பரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசு அதிகாரியும் அதற்கு உடந்தையாக இருந்த அவர் மனைவியும் கைது..!

0 2089

நண்பரின் 16 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த அரசு அதிகாரியையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவர் மனைவியையும் திங்கட்கிழமை கைது செய்த டெல்லி போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தியபிறகு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2021ம் ஆண்டில் Premoday Khakha என்ற அரசு அதிகாரி மீது 16 வயது சிறுமி பாலியல் புகார் அளித்தார். ஓராண்டுக்கும் மேலாக தம்மை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி புகார் அளித்திருந்தார்.

அதிகாரியின் மனைவி தமக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்ததையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments