ரஜினியின் 6 படம் பிளாப்பாம்... ஜெயிலர் வசூல் ரூ.500 கோடியாம்... விஜய் தேவரகொண்டா சொல்கிறார்..!

0 23675

 நடிகர் ரஜினிகாந்த் 6 படங்களின் தோல்விக்கு பின்னர் ஜெயிலர் மூலம் 500 கோடி ரூபாய் வசூல் சாதனை நிகழ்த்தி இருப்பதாக தெரிவித்த தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டா, தெலுங்கில் சிரஞ்சீவியும் தொடர்ச்சியாக தோல்வி படங்களுக்கு பின்னர் வெற்றி கொடுத்திருப்பதாக கூறினார்.

குஷி என்ற பெயரில் வெளியாக உள்ள தெலுங்கு டப்பிங் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அவரது படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தது குறித்து கேட்கப்பட்டது , அதற்கு பதில் அளித்த அவர் ஒவ்வொரு நடிகருக்கும் வெற்றி தோல்வி இருக்கும் என்றும் ரஜினி தொடர்ச்சியாக 6 தோல்வி படங்களுக்கு பின்னர் ஜெயிலர் படத்தின் மூலம் 500 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருப்பதாக தெரிவித்தார், சிரஞ்சீவியும் இது போல தொடர் தோல்விகளுக்கு பின்னர் கடந்த சங்கராந்தியன்று ஹிட் படத்தை கொடுத்ததாக தெரிவித்த விஜய் தேவரகொண்டா, கமல் ஹாசன் விக்ரம் மூலம் ஹிட் கொடுத்ததாக கூறினார்.

எண்ணித் துணிக கருமம் என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய விஜய் தேவரகொண்டா, தமிழில் தனக்கு நிறைய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை பிடிக்கும் என்றார். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை கடத்தி செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக இசையமைப்பாளர் அனிருத்தை கடத்தி சென்று விடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக மேடையில் பேசிய சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி சவுத்ரி, தான் ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து துவாரகா என்ற படம் பண்ணியதாகவும், ஆனால் அது தனக்கு குஷி ஏற்படுத்தவில்லை. அதனால் அவர் மறுபடியும் தன்னுடன் இணைந்து ஒரு படம் பண்ணி குஷி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments