ஆன்மீக பயணத்தின் தொடர்ச்சியாக அயோத்தியில் அனுமன் கோயிலில் ரஜினி, அவரது மனைவி தரிசனம்.. !!

0 1473

ஆன்மீக பயணத்தின் தொடர்ச்சியாக அயோத்தியில் நடிகர் ரஜினி காந்த் வழிபாடு நடத்தினார்.

இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட அவர், ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார்.

பின்னர், லக்னோ சென்ற ரஜினிகாந்த், அங்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தை சந்தித்தார்.

அதன் தொடர்ச்சியாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த அவர், இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

ஆன்மீக பயணத்தின் ஒரு கட்டமாக புன்னிய பூமியான அயோத்தி சென்ற ரஜினி காந்த், அங்குள்ள கோயில் ஒன்றில் அனுமன் சிலையை வழிபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments