கர்நாடகாவில் கீழே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்.. சோதனையின் போது விவசாய நிலத்தில் விழுந்து சிதறியது.. !!

0 1154

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே அந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சித்ரதுர்காவில் அந்த அளில்லா விமான பறக்கவிட்டு சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது திடீரென வட்டிகேரே என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் ஆங்காங்கே அதன் பாகங்கள் சிதறின. விபத்தால் எழுந்த பலத்த சத்தத்தை அடுத்து அங்கு குவிந்த கிராமத்தினர் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திடம் டி.ஆர்.டி.ஓ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments