சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
ஸ்பெயினில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவும் தீ... 26 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஸ்பெயினின் தெனேரிஃபேயில் தொடர்ந்து காட்டு தீ பரவி வருவதால் அதன் அருகில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொளுந்து விட்டு எரிவதால் , தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இங்கிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 30 மைல் சுற்றளவில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 26 ஆயிரம் பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments