காதல் மனைவி கண்களை கட்டி ‘பிளைண்ட் அட்டாக்’ மாப்பிள்ளை மண்டையை பிளந்த மாமனார்..!

0 2365
காதல் மனைவி கண்களை கட்டி ‘பிளைண்ட் அட்டாக்’ மாப்பிள்ளை மண்டையை பிளந்த மாமனார்..!

காதல் மனைவியின் நடத்தையில் எழுந்த சந்தேகம் காரணமாக துணியால் கண்களை கட்டி  சித்ரவதை செய்து வந்த மாப்பிள்ளையை கட்டையால் அடித்து கொலை செய்ததாக மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதல் மனைவியை கண்ணைகட்டி சித்ரவதை செய்ததால் கொல்லப்பட்ட இளைஞரை துணியில் கட்டி தூக்கிச்செல்லும் காட்சிகள் தான் இவை..!

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவர் மாசானம் என்ற பெண்ணை காதலித்து 2 வது தாரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த 6 வருடங்களாகும் நிலையில் நாகராஜ் கிடைக்கின்ற வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவருக்கு உதவியாக மாமனார் முத்துக்குட்டியும் மாப்பிள்ளை வீட்டில் தங்கி இருந்தார்

அண்மையில் சில மாதங்களாக மனைவி மாசானம் வேறு நபர்களுடன் செல்போனில் பேசுவதாக சந்தேகித்த நாகராஜ் தினமும் மனைவியின் முகத்தை துணியால் கட்டிவிட்டு , எப்போது அடி விழும் என்பதே தெரியாத நிலையில் அடித்து துன்புருத்துவதை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது . தன் கண்முன்னால் தனது மகள் துன்புறுத்தப்படுவதை கண்டு முத்துக்குட்டி வேதனையில் இருந்துள்ளார்.

நாளுக்கு நாள் மாப்பிள்ளையின் ‘பிளைண்ட் அட்டாக்’ சித்ரவதை நீண்டது . சம்பவத்தன்று மாசானத்தை கண்ணை கட்டி நாகராஜ் தாக்கியதை கண்டு ஆத்திரம் அடைந்த முத்துக்குட்டி, கட்டையை எடுத்து நாகராஜை சரமாரியாக தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகவும் கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் நாகராஜின் சடலத்தை துணியில் கட்டி வீட்டில் இருந்து தூக்கிச்சென்றனர். மாமனார் முத்துக்குட்டியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments